தமிழ்தேசியம்.
பிறப்பு இறப்பு அற்றவரும், ஆதியும் அந்தமும் அற்றவரும், இலக்கணம் கொண்ட முத்தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் தேசியத்தின் தலைவன்.அகர முதல்வனாகிய இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள் மட்டும் தமிழ் தேசியத்தின் தெய்வங்களாகும்.
பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை தமிழினத்தின் அடையாமாகவும் நெற்றியில் திருநீறும் உடைய ஆண்களும், தலைவாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும், பொட்டுடனும் மங்களகரமாக இருக்கின பெண்களும் தமிழினம் என அடையாளப்படுத்தப்படுத்தும்.
தமிழ் பூமியில் சைவ ஆலயங்களும், ஆலய கோபுரங்களும் தமிழ்தேசியத்தின் அடையாளங்களாகும்.தமிழ் பூமியில் கிறிஸ்தவ மதத்தின் Church களும் அரேபிய இஸ்ஸாமிய மதத்தின் Mosque களும் அதன் அடையாளங்களும் தமிழ் தேசிய அழிப்பின் அடையாளம்.
தமிழ்தேசியம் என்பது முதல் தமிழ் சங்க காலத்தின் தமிழ் சமயமான சைவசமயத்தின் தமிழ் நூல்கள் எடுத்துக் கூறுகின்ற பிறப்பு முதல் இறப்புவரை பின்பற்றி வாழவேண்டிய சைவசமயத்தின் வாழ்வியல் நெறிகள்அனைத்தையும் உள்ளடிக்கியது.
முதல் தமிழ் சங்க காலத்தில் இருந்து கொண்டாப்படுகின்ற அனைத்து விழாக்களும் தமிழ்தேசியத்தின் விழாக்கள் ஆகும். தமிழ் சமயமான சைவ சமயத்தின் பண்பாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்கள், அறுவடை விழாக்கள், மற்றும் கலை விழாக்கள், பொங்கல், சித்திரை தமிழ் புத்தாண்டு, கார்த்திகை தீபம், பாா்வதி சிவனுடன் இரண்டறக் கலந்து சிவன் அா்த்தநாதீஸ்வராக காட்சி கொடுத்த பெருவிழாவான தீபாவளி, சித்திரைத் திருவிழா, தைப்பூசம், நவராத்திரி, போன்ற மற்றும் பல முக்கியமான விழாக்கள் அடங்கும்.
தமிழ்தேசியத்தின் அரசியல் கோட்பாடுகள் என்பது தமிழ் நூல்கள் எடுத்துக் கூறுகின்ற தமிழ் அரசு அதன் நீதி நெறிகள், தமிழ் மக்களின் அரசில், புவியல் தன்மையினை அடிப்படையாக கொண்ட பொருளாதாரக் கோட்பாடு அனைத்தையும் தற்போதைய பூகோல அரசியல் அனைத்தையும் உள்ளடக்கியது.
அருளாணந்தம் அருள்செல்வன்,
உலக சைவ பேரவை, அருளகம், சிவபுரம்.
Comments
Post a Comment